• Jul 20 2025

பாம்பா பாஸ்.. அதுக்கெல்லாம் பயமே இல்ல..! பாம்பை கையால் பிடித்து விளையாடிய பிரபல நடிகர்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் கலக்கும் பிரபல ஹிந்தி நடிகர் சோனு சூட், மீண்டும் ஒரு முறை தனது தைரியமான செயலால் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களை கவர்ந்துள்ளார்.


இந்த முறை, அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த ஒரு பாம்பை கைகளால் பிடித்து பாதுகாப்பாக அகற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் அவர் எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி அந்த பாம்பை கையாளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சோனு சூட் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இது ஒரு விஷமில்லாத பாம்பு. தயவுசெய்து எதற்கும் அச்சப்பட வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


வீடியோவை பார்த்த பலரும், அவர் செய்த இந்த செயலை மிகவும் தைரியமானதெனவும், சிலர் தன்னம்பிக்கையான செயல் என்றும் புகழ்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement