• Dec 25 2024

விவேக் கொடுத்த வாழ்க்கை... வயதானவருடன் திருமணம்... ஓடிப்போன 'காதல் மன்னன்' திலோத்தம்மா... யாருக்கும் தெரிந்திடாத உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை மானு. அதாவது திலோத்தம்மாவாக நம் எல்லோருக்கும் அறிமுகமான இவரின் நிஜப் பெயரே மானு என்பது தான். இவர் நன்றாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு தமிழ் பேச கூடியவர்.

தற்போது இவர் சென்னை பெஸ்ஸன் நகரில் வசித்து வருகின்றார். ஆனால் இவர் பிறந்து வளர்ந்த எல்லாமே அசாமில் தான். ஜூலை 23-இல் அசாமில் பிறந்தார். இவருக்கு சின்ன வயசில் இருந்தே டான்ஸ் என்றால் உயிர். கிட்டத்தட்ட நான்கு  இருந்தே டான்ஸ் ஆட ஆரம்பித்தார். இவர் இவ்வாறாக பரதம், கதகளி இரண்டையும் கற்று தற்போது டான்ஸ் அகாடமி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகின்றார்.


இவரது குடும்பத்தில் இவர் மட்டுமே ஒரு நடிகை. மற்றவர்கள் அனைவரும் டாக்டர் ஆக உள்ளனர். அதாவது அம்மா, அப்பா, மாமனார், மாமியார், கணவர் என் அனைவரும் வைத்தியராக உள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான இவரின் குடும்ப புகைப்படத்தை பார்த்த பலரும் மானு வயதானவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாக கூறினார்கள்.

மாணுவைப் பொறுத்தவரையில் இவர் தனது திருமண வாழ்க்கைக்கு முன்னதாகவே சினிமா வேணாம் என்று ஒதுங்கிய ஒருவர் தான். டான்ஸ் மூலமாக தான் சினிமாவிற்குள் வந்தார். இவரின் எல்லா விடயத்திலும் இவரின் அப்பா இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதேபோல் பாட்டியும் ஆதரவாக இருந்துள்ளார்.

ஒருநாள் இவர் அசாமில் ஒரு டான்ஸ் ஷோவிற்காக வந்திருக்கின்றார். அதில் வந்த அவரின் போட்டோவைப் பார்த்து ஊர் ஊராக நடிகையைத் தேடிற்று இருந்த மறைந்த நடிகர் விவேக் அவர்கள் யார் இந்தப் பொண்ணு இந்தப் பெண்ணை வைத்தே நாம இந்தப் படத்தை இயக்கலாம் என நினைத்திருக்கின்றார்.


அந்தவகையில் விவேக் தான் மாணுவை ஒரு ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். ஐவரும் இன்றுவரை விவேக் இல்லென்னால் என்னுடைய வாழ்க்கையே இல்லை, அவரால் தான் எனக்கு சான்ஸ் கிடைத்தது எனக் கூறி வருகின்றார். ஆரம்பத்தில் இவரை நடிகையாக்குவதற்காக விவேக் நிறைய பொய் எல்லாம் சொல்லியிருக்காராம்.

அதாவது காதல் மன்னன் பட இயக்குநர் சரண் அவர்கள் நல்ல ஹீரோயின் வேணும் என்று சொன்னதனால் இவரும் ஒருநாள் டீக்கடையில் நின்று டீ குடுத்திட்டு இருந்த சமயத்தில் ஒரு போட்டோவை பார்த்து உடனே மானுவின் டான்ஸ் மாஸ்டரிடம் "உங்கள வைச்சு நாங்க படம் எடுக்க போறோம், உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்" என பொய் சொன்னார். இதனை மாஸ்டரும் மானுவிடம் கலந்துரையாடி இருக்கின்றார்.


அதன் பின்னர் மானு வெளியே வந்திருக்கின்றார். அதை வைத்து தான் இவங்கள வேணும் என்றால் நடிக்க வைக்கலாமே என்று முடிவு பண்ணி இருக்கின்றார்கள். அவ்வாறு முடிவு பண்ணித்தான்  மானு சினிமாவில் நுழைந்திருக்கின்றார். இந்தப் படத்தின் பொது இயக்குநர் சரண் இவரைத் திட்டியது மட்டுமல்லாமல் கேலி, கிண்டல் எல்லாம் செய்திருக்கின்றார்.

பின்னர் சரனுடன் கோபித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் படத்தை விட்டே போய்ட்டாரம். பின்னர் அஜித் மற்றும் விவேக் கட்டாயப்படுத்தியமையினால் தான் பின்னர் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு நடித்த 'காதல் மன்னன்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 


இந்த படத்தை அடுத்து இனிமேல் படம் நடிக்க கூடாது என முடிவெடுத்து அவரின் சொந்த ஊருக்கே போய் விட்டார். இதனையடுத்து டான்ஸ் அகாடமி ஆரம்பித்துள்ள இவர் அதில் வருகின்ற பணத்தை அந்த பிள்ளைகளுக்கே செலவழித்து வருகின்றார். கொரோனா நேரத்தில் இவர் நிறைய பேருக்கு உதவி செய்தும் இருக்கின்றார். 

இவர் சஞ்சீப் என்ற கான்சர் சேஜன்ற் ஐ தான் கல்யாணம் பண்ணினார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. பின்னர் 2014 இல் என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தின் மூலம் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கின்றார். 

Advertisement

Advertisement