• Jun 22 2026

அமோக வரவேற்பை பெற்ற 'நூறு சாமி' திரைப்படம்.. ஆனால், 3-வது நாளில் தலைகீழாக மாறிய வசூல்.!

shali / 3 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்திற்கு ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படம், ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஸ்வாசிகா நடித்துள்ளார். மேலும் அஜய் திஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பகவதி பெருமாள், சபிதா ராய், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியான முதல் நாளிலிருந்தே படத்தின் கதைக்களம், உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ஆண்டனியின் நடிப்பும், சசியின் இயக்கமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், ‘நூறு சாமி’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகளவில் வெளியான முதல் 3 நாட்களில் சுமார் ரூ.4.05 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கிடைத்து வரும் நேர்மறை விமர்சனங்களால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 

Advertisement

Advertisement