• Jun 17 2026

ரேகாவின் அப்பாவுக்கு டிமிக்கி காட்டிய முத்து.. இறுதியில் நடந்த தரமான சம்பவம்?

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வைத்தியசாலையில் இருக்கும் ரேகா சத்யாவுக்கு போன் பண்ணுகிறார். இதையடுத்து  வைத்தியசாலையில் இருந்த ரேகாவை மாறுவேடத்தில் சென்ற முத்து, சத்யா  மற்றும் மீனா ஆம்புலன்ஸில் ஏற்றி செல்கின்றனர்.

இதன்போது அங்கிருந்த சிந்தாமணியின் அடியார்கள் மீது மயக்க மருந்தை அடித்துவிட்டு, ரேகாவை அழைத்துச் செல்கின்றார் முத்து . அந்த நேரத்தில் அங்கு ரேகாவின் தந்தையும் வந்து விடுகின்றார்.

இதனால், ரேகாவை காணவில்லை என்று அவரும் பரபரப்பாக தேடத் தொடங்குகின்றார்.


இதைத் தொடர்ந்து சத்யா, ரேகா ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு ஊரில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு செல்கின்றனர் முத்து, மீனா. பின்பு  அங்குதான் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று கூறி, அவர்களை அங்கு தங்க வைக்கின்றனர்.

இதன்போது, ரேகா பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றார். மேலும், வீட்டில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி மனம் வருந்துகின்றார் பாட்டி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement