பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தற்போது நடித்துவரும் King திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர் பகிர்ந்துள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது திரைப்பயணத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் சில படங்களை முழுமையாக பார்த்ததில்லை என்று ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சாஜித் கான் தொகுத்து வழங்கிய "யாரோன் கி பாரத்" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது பிரபலமான தீவானா உள்ளிட்ட திரைப்படங்களை முழுமையாக பார்த்ததில்லை என்று கூறினார். படங்களின் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளின் போது சில காட்சிகளை மட்டுமே பார்த்ததாகவும், ஒரு சாதாரண ரசிகரைப் போல அமர்ந்து முழுப் படத்தையும் ரசித்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'கிங்' திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் ஷாரூக் கான் தனது மகள் சுஹானா கானுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தந்தை-மகள் கூட்டணி திரையில் எப்படியிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிறிஸ்துமஸ் வெளியீடாக உருவாகி வரும் இந்த படம், பாலிவுட்டின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!