• May 13 2025

ஜீ தமிழில் இருந்து விலக காரணம் இதுதான் போலயே.!வெளியானது அர்த்திகாவின் புதிய சீரியல் புரொமோ

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்ட சீரியல்களை உருவாக்குகின்ற சேனல்களில் சிறப்பானதாக சன் டீவி விளங்குகின்றது. எந்த காலத்திலும் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் மேலே இடம் பிடித்து வரும் சன் டீவி, தற்போது தனது ரசிகர்களுக்காக ஒரு புதிய தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த புதிய தொடர் தான் 'வினோதினி'.


இந்த தொடரின் புரொமோவை தற்பொழுது சன் டீவி உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புரொமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தொடர்ந்து குடும்ப உணர்வுகளுடன் கூடிய கதைகள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட சன் டீவி, இப்போது புதிய நம்பிக்கையுடன் 'வினோதினி' தொடரை தொடங்குகிறது.

இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமான வினோதினியாக நடித்து வருபவர் அர்த்திகா. இவர் ஏற்கனவே சில தமிழ் , தெலுங்கு தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவம் கொண்டவர். இவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ‘வினோதினி’ கதாப்பாத்திரத்திற்கே உரியதுபோல் உள்ளது. 


Advertisement

Advertisement