தமிழ் சினிமாவில் 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் உறைந்த நடிகை இவானா, தற்போது தனது திரையுலகப் பயணத்தை தெலுங்கிலும் விரிவுபடுத்தியுள்ளார். இவானா தெலுங்கில் முதன்மையான ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் தான் 'சிங்கிள்'.
இப்படம் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஸ்ரீ விஷ்னு, கேடிகா ஷர்மா, வென்னிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாகக் கொண்ட திரைப்படம் ஆகும். தமிழ் சினிமாவில் “லவ் டுடே” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவானா, இந்தப் படத்தின் மூலம் அதிக எதிர்பார்ப்புடன் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. வெளியான 3 நாட்களிலேயே, ரூ.16.3 கோடியை வசூலித்திருந்தது. மேலும் இந்த வார இறுதிக்குள் 20 கோடி வசூலை தாண்டும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!