• Jul 11 2025

"யாதும் அறியான்" படத்தில் விஜயை CMன்னு காட்ட காரணம் இது தான்.! இயக்குநர் கோபி ஓபன்டாக்..!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியானால், அதற்கும் அதன் இயக்குநருக்கும் பின்னால் இருக்கும் உண்மைகள் மிக முக்கியமானவை. இப்படியாக தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள படம் தான் "யாதும் அறியான்". இந்த படத்தின் இயக்குநர் கோபி, சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தனது உணர்ச்சிகளையும் சினிமா மீதுள்ள அன்பையும், விஜய் குறித்தும் மனம் திறந்து கதைத்துள்ளார்.


"யாதும் அறியான்" திரைப்படம், வித்தியாசமான திரைக்கதையை மையமாகக் கொண்டு, த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் விஜய் ரசிகர்கள் மற்றும் டெரரான சினிமா விரும்புகிறவர்கள் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என இயக்குநர் கோபி தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் தனது படத்தில் 2026CM விஜய் என்று வைத்ததற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார். அத்தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்போது, “'யாதும் அறியான்' படத்தில் விஜய் சார் ரெபரன்ஸ் வைத்தது புரொமோசனுக்காக கிடையாது. அதனால் அவர் கிட்ட கொண்டு போய் படத்தை காட்டல. அவருடைய ரெபரன்ஸை மன திருப்தியோடு எனக்கு பிடித்ததால் தான் வைத்தேன்.


2026ல் வேற எந்த மேட்டர் வேணுமென்றாலும் நடக்கலாம். ஆனா, சின்ன வயசில இருந்து விஜய் சாரை நான் மோட்டிவேசனாக எடுத்துக்கிட்டு விஷயங்களை பண்ணுவதுண்டு. நான் விஜய் சாரின் பெரிய ரசிகன். இதை ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவோ சுயநலமாகவோ செய்யவில்லை." எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

Advertisement