நடிகர் சூர்யா தனது 44-வது திரைப்படமாக “ரெட்ரோ” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் தனித்துவமான கதை சொல்லும் முறை மற்றும் ஸ்டைலிஷ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில், “ரெட்ரோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில நினைவுப்புகைப்படங்களை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் படக்குழுவினருடன் இணைந்து எடுத்த மகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சூர்யாவுடன் இணைந்து எடுத்த candid புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளன.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் கமெண்ட்களில் படத்தை மீண்டும் நினைவுகூர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பூஜா பகிர்ந்துள்ள குறிப்புகளும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளது. இப்படியான நினைவுகள், படத்தின் மீது ரசிகர்களின் ஈர்ப்பை மீண்டும் அதிகரிக்கச் செய்துள்ளன.
Listen News!