• Dec 26 2024

வெங்கட் பிரபு எடுத்த முடிவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்! இனி நெகட்டிவிட்டி ஓவர்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கும் கோட்  திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான போதும் அவை சரியான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறுவதற்கு தவறியுள்ளது. இதன் காரணமாக கோட் படம் ரிலீசாக முன்பே இந்த படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்து  வருகின்றன.

இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்துள்ளதோடு இதில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மைக் மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து உள்ளது. இதன் காரணமாகவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

கோட் படத்தில் இறுதியாக வெளியான தேர்ட் சிங்கிள் பாடல் விஜய் ரசிகர்களையே நிலைகுலைய வைத்துள்ளது. அதற்கு காரணம் அதில் விஜயை இளமையாக காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி தான். 

இந்த நிலையில் கோட் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 


அதாவது கோட் படத்தில் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானதிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட பயம்தான் அதிகரித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனை போக்கும் விதமாக படக்குழு ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி கோட் படத்தின் ட்ரெய்லரை சூப்பராக ரெடி செய்துள்ளார் வெங்கட் பிரபு. அதை விஜயிடம் காண்பித்து ஓகே வாங்கிவிட்டாராம். அதோடு எதிர்வரும் அவர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement