• Dec 26 2024

பூஜையுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஆர்யாவின் அடுத்த படம்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

2005 இல் "அறிந்தும் அறியாமலும்" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அந்தாண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றவர் நடிகர் ஆர்யா.தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக தனது உழைப்பின் மூலம் உயர்ந்த ஆர்யா தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

Image

கடந்தாண்டுகளில் ஆர்யாவின் திரைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பிற்காய் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.இந்நிலையில் ஆர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துதுள்ளது.

Image

ஆர்யாவின் அடுத்த படத்தை மினி ஸ்டுடியோஸ் LLP தயாரிக்க ஜியன் கிருஷ்ணா இயக்குகிறார்.மினி ஸ்டுடியோஸின் 14வது திரைப்படமான இது ப்ரோடுக்ஷன் no 14 எனும் தற்காலிக தலைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக மங்கள பூஜையுடன் தொடங்கியுள்ளது ஆர்யாவின் அடுத்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள்.  



Advertisement

Advertisement