• Jun 23 2025

"தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கப்போகின்றன” நடிகை கேள்விக்கு பதிலளித்த விஜய்..

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவர் நடிக்கும் கடைசி படம் என பலர் நம்புகின்றனர். இவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் வீடியோ பகுதி ஒன்று இன்று பிறந்தநாள் பரிசாக வெளியாகியது.


இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மமீதா பைஜூ ஒரு பேட்டியில் “ஜனநாயகன்” குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இதைவிட "ஜனநாயகன் " படப்பிடிப்பின் இறுதி நாள் ரொம்ப எமோஷனலாக இருந்ததாக கூறியுள்ளார்.


மேலும் "நான் விஜய் சாரிடம், 'ஜன நாயகன் தான் உங்களுக்கு கடைசி திரைப்படமா என்று கேட்டேன். அதற்கு அவர் தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தான் தெரியும் என்றார். ஜன நாயகன் கடைசிக் கட்டப் படப்பிடிப்புகளில் நாங்கள் அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். விஜய் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும், அவருடன் புகைப்படம் எடுக்கும் போது நானும், சுற்றி இருந்த அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். அப்போது விஜய் சாரும் எமோஷனலாகிவிட்டார்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement