• Aug 14 2025

விஷால் 35படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களின் குறைகளை கேட்ட விஷால்...! வைரலாகும் வீடியோ...!

Roshika / 43 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது 35-வது படத்தில் நடிக்கவுள்ளார்.‘ஈட்டி’ திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு, இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். பழமை வாய்ந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.வி. சவுத்ரி இந்த படத்தை தயாரிக்கிறார்.


விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இதில் நடிக்கிறார். துஷாரா, தனது திறமையான நடிப்பால் இளம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஷாலை சந்திக்க வந்த ரசிகர்கள், அவரிடம் தங்கள் குறைகளை நேரில் கூறி உரையாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


மேலும் விஷால் – ரவி அரசு கூட்டணியில் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement