லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. ரஜினியின் படமாக இருப்பதுடன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஆமிர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
டிக்கெட் முன்பதிவிலேயே சாதனை படைத்துள்ள இந்த படம், வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ், மூவி ரூல்ஸ், மூவிஸ்டா போன்ற பைரஸி தளங்களில் குறைந்த தரமான பதிப்புகளுடன் வெளியாகியுள்ளது. கூடுதலாக, Telegram சேனல்களிலும் 'HD Print' என கூறப்பட்ட லிங்குகள் பரவ தொடங்கியதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ‘கூலி’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சுதந்திர தின விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களால், படத்தின் வசூல் வருவாய் உயர வாய்ப்பு உள்ளது. பைரஸி வழியாக படங்களை பார்ப்பது சட்டவிரோதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், மதிப்புரிமைச் சட்டம் கீழ் 2 லட்சம் ரூபாய் அபராதமும், சிறைதண்டனையும் சந்திக்க வேண்டியிருக்கும். ரசிகர்கள், உங்கள் திரையிடங்களை ஆதரிக்க, தியேட்டரிலேயே படம் பாருங்கள். திரைப்படத்தை சட்டத்தின்படி அனுபவிப்பது தான் உண்மையான ரசிகனின் அடையாளம்.
Listen News!