• May 05 2025

மீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் விஜயா.! இது என்னடாப்பா புதுசா இருக்கு.! சிறகடிக்க ஆசை புரொமோ!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன டுவிஸ்ட் வரப்போகின்றது என ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு வருகின்றனர். இப்பொழுது வரை கதை சாதாரணமாகவே ஒளிபரப்பாகி வருகின்றது. இன்றைய எபிசொட்டில் மனோஜ் ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணுறார்.

அதைப் பார்த்த விஜயா அந்த வேதனையை தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். இவ்வாறாக இன்றைய கதைக்களம் மிகவும் சிறப்பாக இடம்பெறுகின்றது. தற்பொழுது பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் நாளைய எபிசொட்டிற்கான புரொமோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


அதில் சிந்தாமணி முத்து தன்ர வீட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மாதிரி வந்து பணத்த எடுத்துக் கொண்டு போனதைப் பற்றி விஜயா கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா அந்தப் பூ கட்டுறவ பணத்த நீங்க ஆள வச்சு திருடினீங்க புருஷன் பொண்டாட்டி பணம் திருட்டு போச்சு என்றால் பாத்துக் கொண்டு சும்மா இருப்பானா? என்று சிந்தாமணியிடம் கேக்கிறார்.

மேலும் மீனா கையில அடிபடுற மாதிரி பண்ணுவீங்களா என்று சிந்தாமணியப் பாத்து கோபமாகக் கேக்கிறார். அதனை அடுத்து இனி நீங்க இங்க வந்து டான்ஸ் ஒன்டும் கத்துக்க வேணாம் என்று சொல்லுறார். மேலும் நீங்க எல்லை மீறி போய்ட்டீங்க இனிமேல் அவளின்ட தொழில கெடுக்கிற மாதிரியான வேலையெல்லாம் பாக்காதீங்க என்று மீனாவுக்கு சப்போர்ட் பண்ணுறார் விஜயா.

Advertisement

Advertisement