• Mar 09 2025

திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய்..! மகளிர் தின உரையால் ஏற்பட்ட பரபரப்பு!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு த. வெ.க கட்சியினைத் தொடங்கிய விஜய் தற்பொழுது அரசியல் நடவடிக்கைகளில் மிகுந்த உற்சாகத்துடன் செயற்படுகிறார். 

தற்பொழுது மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு, விஜய் தனது உரையை வெளியிட்டுள்ளார். இதில், "என்னுடைய அம்மா, சகோதரி, தோழி என அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்! ஆனால், இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை தொடர்கிறது. இது எவ்வாறு கொண்டாடக்கூடிய நாள் ஆக முடியும்?" என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


விஜயின் உரையில், "நாம் அனைவரும் சேர்ந்து திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். மாற்றம் நிச்சயமாகத் தேவை என்றார். அத்துடன் 2026 தேர்தலில், திமுகவை மாற்றுவோம்!" என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய், நேரடியாக திமுகவை எதிர்க்கும் முடிவாக காணப்படுகிறது.

இந்நிலையில், விஜய் தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்துகிறார். மேலும் இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். ஒரு புறம் சினிமாவில் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம் அரசியல் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் விஜய்.


விஜய், தனது அரசியல் பயணத்தை மிக கவனமாக நகர்த்தி வருவதுடன் மக்கள் மனதில் செல்வாக்கு ஏற்படுத்தும் வகையில், அவர் தொடர்ந்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், மகளிர் தின உரை மற்றும் திமுக மீது அவர் காட்டிய எதிர்ப்பு, அவரது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக காட்டுகிறது.

Advertisement

Advertisement