• Dec 25 2024

என்ன கேனனு நினைச்சிட்டீங்களா? யாருக்கும் சோறு கிடையாது! கோவத்தின் உச்சியில் விசித்ரா! வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில்  விசித்ரா விதிமீறல் செய்வதாக காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிறகு ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 


அதாவது இந்த வாரம் இடம்பெற்ற அனைத்து டாஸ்க்களிலும் பிக் பாஸ் வீட்டினர் தான் வென்றுள்ளனர். இந்த நிலையில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பிளான் போட்டு தாக்குவதில் கண்ணாய் உள்ளனர். 

இவ்வாறான நிலையில், தற்பொழுது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், டாஸ்க் ஒன்றில் அனைவரும் ஒன்றாக விளையாடுகின்றனர். டாஸ்க் முடிந்தவுடன் தினேஷ் மற்றும் விசித்ராவுடன் வாக்குவாதம் செய்கிறார் அர்ச்சனா. ஒரு கட்டத்தில் கடுப்பான விசித்ரா நான் ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு போவதாக கூறுகிறார். 


இதனையடுத்து தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில். என்ன எதுக்குடி வெளிய அனுப்பினீங்க? விசித்ரா கேக்க, 'ரூல் பிரேக் பண்ணா கரண்ட் ஆஃப் ஆகும்' என ஜோவிகா சொல்கிறார். 

இறுதியில் என்ன கேனனு நினைச்சிட்டீங்களா? நான்  இங்கதான் இருப்பன் க்கேஸ் ஆப் பண்ணிட்டு உக்காருங்க எல்லாரும்.யாருக்கும் சோறு கிடையாது எனக் கூறிவிட்டு கிளம்புகிறார் விசித்ரா.  


Advertisement

Advertisement