• Jul 18 2025

இன்னும் இருப்பது 100 நாட்கள் ! "கங்குவா" படக்குழு வெளியிட்ட வீடியோ !!

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி இணைந்து தயாரித்து இயக்குனர் சிவா  இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழ் ஃபேண்டஸி திரைப்படமான "கங்குவா" பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படமாகும்.

Kanguva' Poster: Suriya Turns Into A ...

பாபி தியோல் மற்றும் திஷா பதானி இணை கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு,கோவை சரளா ,ஆனந்தராஜ் ,  கே.எஸ்.ரவிக்குமார் என நடிகர்கள் வரிசை நீள்கிறது.இறுதிக் கட்ட வேலைகளில் உள்ள "கங்குவா" திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.

Kanguva - Wikipedia

"கங்குவா" படத்தின் ரிலீஸ் தேதியை நினைவுபடுத்தும் பொருட்டு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனின் உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் "இன்னும் இருப்பது 100 நாட்கள் ! " எனும் தலைப்புடன் வெளியாகியுள்ளது புது வீடியோ அறிவிப்பு.படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது.


Advertisement

Advertisement