• May 10 2025

தேர்வில் மிரளவிட்ட மகன்..! காமெடி நடிகர் கொடுத்த பரிசு..

Mathumitha / 11 hours ago

Advertisement

Listen News!

பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை சினிமா துறையில் தனது காமெடி கதாபாத்திரங்களுக்காக பிரபலமாக இருந்தவர். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளை கற்றுக் கொண்டு வளர்ந்துள்ளார். 


மேலும் இவர் 2017ம் ஆண்டில் வரலாறு பாடத்தில் பி.ஏ. டிகிரி முடித்து தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவை மட்டுமன்றி தற்போது இவரது மகனும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்.இவர் கல்வியில் மட்டுமன்றி தனது தந்தையை போன்று கராத்தே விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். 


இந்நிலையில் முத்துக்காளையின் மகன் 12ம் வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் கல்வியில் சாதித்த தனது மகனுக்கு மிகவும் பிடித்த பால்கோவா ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார். 

Advertisement

Advertisement