நடிகர் ஜெயம் ரவி கெனிஷா குறித்த சர்ச்சை இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு இவர் தனது நெருங்கிய நண்பியுடன் சேர்ந்து சென்றமை தற்போது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது.
மேலும் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரவிமோகன் சிறிது நேரத்திற்கு முன்னர் கெனிஷாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து unfollow செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றது. மேலும் ஒரு சில விமர்சனங்கள் இவர் unfollow செய்து மீண்டும் follow செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளன இந்த நிலையில் இவர் தற்போதுவரை தனது நண்பியை follow செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!