• Apr 27 2025

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' மீண்டும் திரையில்...! எப்போது தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் கார்த்தி, ஆண்ட்ரியா ,ரெய்மாசென் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' இப் படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தினை மார்ச் 14-ஆம் தேதி தெலுங்கு மொழியில் ரீ-ரிலீஸ் செய்வதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.


மற்றும் இப் படத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கான புதிய அனுபவத்தை இப் படம் மீண்டும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் மீண்டும் இந்த படம் திரையில் காணவிருக்கிறார்கள். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் அதன் எமோஷனல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதைவிட ரீரிலீஸ் கலாச்சாரத்தில் ஒளிபரப்பாகும் கார்த்தியின் முதலாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement