• May 16 2025

ஹீரோ இன் ஸ்கிரீன் அல்ல... ஹீரோ இன் ரேஸ்...! இன்ஸ்டாவை அதிரவைத்த அஜித்தின் போட்டோஸ்..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் நடிகர் என்ற அடையாளத்தையும் தாண்டி, பிரபல ரேஸராக தன்னை நிரூபித்துள்ள அஜித் குமார், துபாயில் நடைபெற்றுள்ள 24 மணி நேர ரேஸிங் போட்டியில் தனது அணியுடன் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.


இந்த நிகழ்வு ஒன்றும் சாதாரணமானது அல்ல. இது துபாயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்த 24 மணி நேர இடைவேளையில்லா மிகப்பெரிய பந்தயமாகும். உலகின் பல்வேறு மூலைகளிலிருக்கும் ரேஸிங் வீரர்கள் இதில் பங்கேற்பார்கள். இதில் தமிழ் நாடு சார்பாக அஜித் குமார் கலந்து கொள்வது பெருமைக்குரிய விடயமாகும்.


அவரது தனிப்பட்ட ரேஸிங் குழு தற்பொழுது உலகில் முன்னேறிக் கொண்டே வருகின்றது. இந்த அணியில் இருந்தும் பலர் தற்போது உலகளவில் பெயர் பெற்ற ரேஸர்களாக மாறி வருகின்றனர். அஜித் பங்கேற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் தீயாக பரவி வருகின்றது. குறிப்பாக, அவர் தனது குழுவினருடன் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


Advertisement

Advertisement