திரைப்படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தனது கதைக்களத்தில் சிறப்பாக விளங்கும் நடிகையாக அமலா பால் காணப்படுகின்றார். ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இவர் அதனை அடுத்து விஜய், சூர்யா மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர், சினிமாவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் மிகவும் துணிச்சலான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவருக்கும் ஒரு அழகான மகன் பிறந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலா பால், தனது கணவர் பற்றிய புதிய தகவல்களைப் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அமலா பால் கூறியதாவது, “நான் ஜகத்தை முதன்முதலில் கோவாவில் சந்தித்தேன். அவர் குஜராத்தி என்றாலும், கோவாவில் தான் வசித்து வந்தார். அங்கு தான் நம் முதல் சந்திப்பு நடந்தது. அவர் ரொம்பவே நல்ல குணங்களைக் கொண்டவர். அதுதான் என்னை அதிகம் கவர்ந்தது.” எனக் கூறியிருந்தார்.
மேலும் அமலா பால் கூறுகையில் “தனது கணவர் தென்னிந்தியப் படங்களைப் பார்க்காதவர். அதனால் தான் நான் ஒரு நடிகை என்பதையே அவருக்கு தெரியாது. நானும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு தான் தெரியவந்தது." எனவும் தெரிவித்துள்ளார்.
நான் கர்ப்பமாக இருந்தபோது தான், அவர் என்னுடைய படங்களை ஒவ்வொன்றாக பார்த்தார் அதன் போது தான் அவருக்கு நான் ஒரு நடிகை என்பதே தெரியும் என்றார் அமலா பால். மேலும் "அவருக்கு விருது நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பெட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாகப் பார்த்தார்" என்று தனது கணவர் ஜகத் தேசாய் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
Listen News!