தமிழ் சினிமாவின் நேர்மையான நடிகையென கருதப்படும் அமலா பால், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை அழகாக அலங்கரித்ததோடு, நிகழ்ச்சியின் போது மிகுந்த உணர்வுடன் பேசினார். தனது வாழ்க்கை அனுபவங்களையும், சமகால சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் உணர்ச்சி வன்முறைகளையும் பகிர்ந்த அமலாவின் உரை தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
அமலா பால் கூறிய வார்த்தைகள், சிறிது நேரம் நிகழ்ச்சியை அமைதியாக்கியதுடன் பல ரசிகர்களும் இதனை வரவேற்றனர். அமலா பால் தனது உரையில், காதல் என்பது எவ்வாறு ஒரு மிஸ் யூஸ் செய்யப்பட்ட வார்த்தையாக மாறிவிட்டது என்று எடுத்துரைத்தார். குறிப்பாக, “நிறைய பேர் நம்மள ‘லவ்’ என்ற பெயரில் ஏமாத்துறாங்க... காதல் என்பதற்கான அர்த்தமே மாறிடுச்சு,” என்றார் அமலா பால்.
அமலா பால் கூறிய மிக முக்கியமான கருத்து என்னவென்றால், “Love என்று சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க. அந்த வார்த்தையை கேட்டாலே சில பேருக்கு பயம் வருகிறது. ஏன் தெரியுமா? அந்த வார்த்தையில் உண்மை இல்லை." என்று கூறியிருந்தார்.
இப்பொழுது காதல் என்ற பெயரில் பல பெண்கள் தவிக்கும் நிலை குறித்து அவர் மிகவும் நுட்பமாகவும் உணர்வு பூர்வமாகவும் பேசியிருந்தார். காதலால் மன அழுத்தம், கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல், தவறான எதிர்பார்ப்புகள் ஆகியவை பெண்களுக்கு இன்னலாக மாறிவிட்டதாகவும் அமலா பால் கூறியிருந்தார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!