• Jul 18 2025

தனி விமானத்தில் பறந்த ஆயிஷா...! வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகைகளில் ஆயிஷா ஒருவர் என்று கூற முடியும். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாத்துறையின் ஆர்வம் காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெடி ஸ்டெடி போ' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது பல சீரியல்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்றார்.  இந்த நிலையில் தனது  சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  


மேலும் இவர் தனது சீரியல் பயணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' தொடரில் நடித்து இருந்தார்.மேலும் சில காரணங்களினால் அந்த தொடரை தொடந்து நடிக்க முடியாமல் போகவே மீண்டும்  சன் டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற  தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றார் .


தொடர்ந்து தனது முயற்சியை கை விடாமல்  முயற்சி செய்த படியால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சத்யா" என்னும் சூப்பர் ஹிட்  தொடரில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார்.


மேலும் வெள்ளித்திரையில் தனது முதல் பயணமாக 2017ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தில் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைத்துறையை ஆரம்பித்தார். மேலும் தனது  பயணத்தில் பிக்பாஸ் 6 பங்கு பற்றி அதிலும் தன்னை வளர்த்தது கொண்டு சென்றுள்ளார்.


தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட  புகைப்படத்தில் தனி விமானத்தில் பயணிப்பது போன்று பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு  வருகின்றனர். 














Advertisement

Advertisement