• Jul 18 2025

அல்லோல கல்லோல நிலையில் பாக்கியலட்சுமி வீடு.. கமலாவும் ராதிகாவும் செய்த காரியம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கமலா கொடுத்த கம்பளைண்ட் நினைத்து ராதிகா பயந்து கொண்டிருக்க, நீ எதையும் யோசிக்காதே நான் பார்த்துக் கொள்கின்றேன் என கமலா அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

அந்த நேரத்தில் கோபி வரவும் இருவரும் பேச்சை விட்டு விட்டு பேசாமல் இருக்க, கோபி வந்து தண்ணியை குடித்துவிட்டு பேசாமல் படுகின்றார். இதனால் கோபிக்கு உண்மை தெரிந்திருக்குமோ இல்லையோ என ராதிகா பயப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் ஈஸ்வரியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, செல்வி சாப்பிட சொல்லவும் யாரும் சாப்பிடவில்லை. எனிலும் எழிலும் செழியனும்  எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஈஸ்வரியின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.


இதை அடுத்து ஈஸ்வரி, பாக்கியா, ராமமூர்த்தி, இனியா எல்லோரும் வந்து இறங்க, எல்லோரும் அதிர்ச்சியாக நிற்கின்றார்கள். ஈஸ்வரி உள்ளே வந்து கலகலவென சிரித்து நடந்தவற்றை சொல்லி பேசிக் கொண்டிருக்க பாக்கியா கிச்சனுக்கு சென்று அழுகிறார்.

அந்த நேரத்தில் செழியனுக்கு போலீசார் கால் பண்ணி ஈஸ்வரி வந்துட்டாரா? எனக் கேட்க, வேறு வழி இல்லாமல் ஆமாம் என  சொல்லுகிறார். இதனால் போலீசும் கிளம்பி வருகின்றது.

இன்னொரு பக்கம் கமலா பாக்கியா வீட்டை பார்த்தபடி ரோட்டில் நிற்கின்றார். மீண்டும் உள்ளே சென்று ராதிகாவிடம் போலீஸ் கிளம்பிட்டாங்க என்று சொல்லுகிறார். கமலா மீண்டும் வெளியே  வந்து பாக்யா வீட்டை பார்த்தபடி நிற்க, ராதிகாவும் வந்து என்ன செய்வதென்று தெரியாமல் கமலாவுடன் பாக்கியா வீட்டை பார்த்தபடி ரோட்டில் இருக்கின்றார்.

அந்த நேரத்தில் வாக்கிங் போயிட்டு வந்து கொண்டிருந்த கோபி, இவர்கள் இருவரும் பாக்கியா வீட்டை பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்து நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement