• Jul 18 2025

திரைத்துறையின் மாமன்னர் மறைவு… கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகத்தின் புகழ்பெற்ற நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இன்று காலமானார். வயது முதிர்வாலும் உடல் நலக்குறைவுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார். அவருக்கு வயது 83.


இந்த செய்தி திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

கோட்டா சீனிவாச ராவ் இறந்த செய்தி வெளியானதுடன், ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லம், திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்களின் வருகையால் அஞ்சலித் தளமாக மாறியது. குறிப்பாக, நடிகர் பிரகாஷ் ராஜ், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.


அதுமட்டுமல்லாது, தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்த சத்யராஜ், தனது இரங்கலை வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எனது நண்பரான கோட்டா சீனிவாச ராவ் இறந்தது மிகவும் வேதனையான செய்தி. அவர் ஒரு அற்புதமான நடிகர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான மனிதர். திரையில் அவர் செய்யும் ஒவ்வொரு வேடமும் இயல்பான உணர்வுகளால் நிரம்பி இருந்தது. அவரது நடிப்பை இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றார்.

கோட்டா சீனிவாச ராவ் அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகத்திற்கே பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது நடிப்பு, கலைஞனாக காட்டிய திறமை மற்றும் பண்பு இவை அனைத்தும் ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.


Advertisement

Advertisement