• Apr 27 2025

DJDயில் இந்த வாரம் மரணமாஸ் கொண்டாட்டம்..! நடுவர்களைக் கதறவைத்த போட்டியாளர்கள்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டு வரும் ஜீ தமிழ் சேனலின் பிரபலமான நிகழ்ச்சி 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', இந்த வாரம் நெஞ்சை உருக்கும் அளவுக்கு பரபரப்பாக அமையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான நடன அமைப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சி, இவ்வாரம் ஸ்பெஷல் விருந்தினை தயார் செய்துள்ளது.

இந்த வாரம், போட்டியாளர்கள் அனைவரும் தங்களது ஆற்றலின் எல்லைகளைக் கடந்து நடன அரங்கேற்றங்களை வழங்க உள்ளனர். ஒவ்வொரு ஜோடியும் வேற லெவல் நடனத்தையும் , அசர வைக்கும் சாகசங்களையும் மொத்த ரசிகர்களுக்கும் வழங்கவுள்ளனர்.


நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, போட்டியாளர்கள் சிலர் நடனம் மூலம் நடுவர்களின் உணர்வுகளை பதற வைத்துள்ளனர். அந்த அளவிற்கு, எனர்ஜியாக நடனத்தினை வழங்கவுள்ளனர். மேலும் இதைப் பார்த்த நடுவர் வரலட்சுமி மற்றும் சினேகா வாயடைத்துப் போய் எதுவும் பேசமுடியாது இருந்துள்ளார்கள்.

'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து ரசிகர்கள் இந்த ஷோவின் மேல் கொண்டிருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் இந்த வார நிகழ்ச்சி ரசிகர்களின் மனதை மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement