• Jul 18 2025

சர்ச்சை நடிகை வனிதாவின் பேச்சு... இளையராஜாவை மிரட்டும் பாணியா? நடிகர் பயில்வான் சீற்றம்..!

luxshi / 2 days ago

Advertisement

Listen News!

நான் இளையராஜாவின் வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள் என வனிதா விஜயகுமார் பேசியிருப்பது இளையராஜாவை மிரட்டும் பாணியில் இருந்ததாகவும் வனிதா தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக மாறிவிட்டதாகவும் நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த வனிதா விஜயகுமார்,

நான் "இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டும்" என்று சொல்லி இருந்தார். இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருவதுடன்  திடீரென சொன்ன ஒரே வார்த்தை வனிதாவுக்கு எதிராக இப்போது கிளம்பி இருக்கிறது. 


இந்நிலையில் குறித்த வார்த்தையால் சர்ச்சையில் சிக்கியுள்ள வனிதா தொடர்பில் நடிகர் பயில்வான் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர்,

நடிகை வனிதா எப்ப வேணாலும் அழுவாங்க. எப்ப வேணாலும் சிரிப்பாங்க. அவர் ஒரு சர்ச்சைக்குரிய நடிகை. 

அவர் நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தினுடைய ப்ரமோஷன்களுக்கு அந்த படத்தினுடைய கதாநாயகன் ராபர்ட் மாஸ்டர்  வரவே இல்லை.

இதற்காகதான் வனிதா அழுதாரோ? அல்லது அந்த படத்தை அவருக்கு பிடிக்கவில்லையா என்பதும் தெரியவில்லை.

நடிகை வனிதாவுக்கு வாய் திறந்தால் எதை பற்றி கதைப்பது என்பது கூட அவருக்கு தெரியாது.


இவ்வாறான நிலையில்  இளையராஜாவிடம் கெஞ்சி அன்பாக வாங்க வேண்டிய விடயத்தை  நான் உன் வீட்டுக்கு மருமகளா வர வேண்டியவ.. தொலைச்சிடுவன் தொலைச்சு என்ற மாதிரி ஒரு பிளாக்மெயில் பண்ற மாதிரி பேசியிருக்கின்றார்.

இந்நிலையில் அவர் காமெடி பண்ணுகிறாரா? இல்லை சீரியஸாக தான் கதைக்கின்றாரா என்பதும் அவருக்கு தான் தெரியும் என்றவாறு பயில்வான் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement