• Apr 28 2025

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சம் பரிசா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.

இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்க, சினேகா, சங்கீதா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்தார்கள்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றியடைந்த நிலையில், தற்போது நடைபெற்று வந்த இரண்டாவது சீசனின் பைனல் போட்டி நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், நடன இயக்குனரும், தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கலந்து கொண்டதோடு, பல திரையுலக நட்சத்திரங்களும் இந்த பைனல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.


இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 வின் டைட்டில் வின்னராக அக்ஷிதா நாவின் ஜோடி அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தமது திறமையினாலும் தமது கடின உழைப்பினாலும் முதல் இடத்தை பிடித்த இந்த ஜோடிக்கு 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இப்ராஹிம்  - அக்ஷிதா ஜோடியும், மூன்றாவது இடத்தை கௌரி - விவேக் ஜோடியும் பிடித்துள்ளார்கள்.


Advertisement

Advertisement