• Apr 30 2025

எக்ஸ்பிரஸ் வேகத்தில் உருவாகும் தனுஷின் அடுத்த படம்..!இணையத்தில் உலாவரும் தகவல்கள்..

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நடிகர் , இயக்குநர் மற்றும் பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் தான் தனுஷ். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படம்  வெளியாகிய கொஞ்ச நாட்களிலே வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், "இட்லி கடை" திரைப்படமும் தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகி வருகின்ற நிலையில் அடுத்த படத்திற்கான புதிய அப்டேட்  ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது .

ஏற்கனவே தனுஷ் நடிக்கும் "குபேரா" திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 20ம் திகதி வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது. நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மற்றும் தலிப் தகில் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ்  நிறுவனம் தயாரிக்கவுள்ள "அறுவடை" என்ற படத்தில் தனுஷ் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். அத்துடன் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த படத்திற்கான செட்டினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் அமைத்து வருவதாகவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement