தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் தனது கரியரின் தொடக்கத்தில் ‘சென்னை 28’ படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றி பெரும் அனுபவம் பெற்றார். அதன் பின் ‘அட்டகத்தி’ என்ற படத்திலேயே அவருடைய ஆரம்ப இயக்கத்தில் பெரும் கவனத்தை பெற்றிருந்தார்.
அடுத்து ‘மெட்ராஸ்’ என்ற படத்தால் ரசிகர்களிடையே மாஸ் ஹிட் அடித்து பா.இரஞ்சித் தன்னுடைய இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தினார். தற்போது இயக்குநரின் அடுத்த படம் குறித்து அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. பா.இரஞ்சித் தனது அடுத்த படமாக இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூ அவர்களின் வாழ்க்கையை பயோபிக் முறையில் திரைக்கெடுக்க திட்டமிட்டுள்ளாராம்.
இந்தப் படம் குறித்து இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இது திரைப்பட உலகில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஏனெனில் பல்வங்கர் பலூ அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றவை. இந்தப் படத்தின் மூலம் தலித் சமூகத்தின் முக்கியமான கதையை திரையில் காண்பிப்பது சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
Listen News!