• Apr 26 2025

கோர்ட் 2 படத்தில் விஜய் இணைகிறாரா..? இயக்குநர் வைத்த டுவிஸ்ட்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘தளபதி’ விஜயின் நடிப்பில் வெளியான ‘கோர்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறந்த கதைப் பின்னணியில் உருவாகியிருந்த இப்படம் சமூகச் சிந்தனைகளை தூண்டும் கதையம்சத்துடன், பரபரப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்த்தது. இயக்குநர் வெங்கட்பிரபு தனக்கென தனித்துவமான ஸ்டைலில் இப்படத்தை இயக்கி, விஜய்யின் மாஸான நடிப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது வெங்கட்பிரபு ‘கோர்ட் 2’ படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்திய பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்த்திருந்தது  என்பதால், சமூக வலைதளங்களில் இச்செய்தி வேகமாக பரவி வருகிறது.


இயக்குநர் வெங்கட்பிரபு தனது பேட்டியில்,"கோர்ட் படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. அது ஒரு முடிவு அல்ல, தொடக்கம்! என்று கூறியதுடன்  ‘கோர்ட் 2’ செய்வது உறுதி என்றார். மேலும் ரசிகர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்" எனவும் தெரிவித்தார்.

வெங்கட்பிரபு ஒவ்வொரு கதையையும் சிறப்பாக இயக்கம் இயக்குநர் என்பதால், ‘கோர்ட் 2’ அவரின் ஏனைய படங்களை போலவே எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்தப் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகின்றார்? என்ற கேள்வியும் எழுந்துவருகின்றது.

Advertisement

Advertisement