இந்திய சினிமாவின் மாயாஜாலக் காதல் கதையாக 1990ம் ஆண்டு திரைக்கு வந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ திரைப்படம், இன்று 35 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களிடம் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. தெலுங்கு மொழியில் வெளியான இந்தப் படம் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்தது.
இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்திருந்தனர். ஒரு சாதாரண மனிதனுக்கும், விண்ணுலக தேவதைக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டு உருவானதாக இப்படம் விளங்குகின்றது. இந்தப் படம் தற்போது 4K வடிவமைப்பில் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய தலைமுறைக்கு இந்தப் படம் பாரம்பரிய கதை மற்றும் மாயமான அழகு என்பவற்றைப் பிரதிபலிப்பதாக காணப்படுகிறது.
இந்த ரீ ரிலீஸ் வாய்ப்பில், சிரஞ்சீவி தனது மனம் திறந்து பேசியுள்ளார். அவரது வார்த்தைகள் ரசிகர்களை உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அவர் கூறியதாவது, "இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீதேவியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இந்த படத்தின் இதயம். அந்த பாத்திரத்தை அவர் போலவே புனைவது கடினம்." என்று உணர்வு பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், "ஆரம்பத்தில், நான் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாவதை விரும்பவில்லை. அதை ஒரு நினைவாகவே வைத்திருக்க விரும்பினேன். ஆனால் தற்போது, அதை நாக் அஸ்வின் இயக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகுவதனைப் பார்க்க விரும்புகின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.
Listen News!