• Apr 26 2025

விஜய்க்காக முட்டி இட்டு வேண்டுதல் செய்த ரசிகர்...! எதற்காகத் தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது தனது அரசியல் அனுபவத்தின் மூலம் நாடெங்கும் பேசப்படும் நாயகனாக மாறியுள்ளார். "தமிழகத்தை மாற்றுவோம்" என்ற தொனியில் தொடங்கியுள்ள விஜயின் அரசியல் பயணம் ரசிகர்களிடையே பல கருத்துக்களை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், சினிமா உலகையே பிரமிக்க வைக்கும் வகையில் விஜய்க்காக ஒரு ரசிகர் செய்த செயல் தற்பொழுது வைரலாகியுள்ளது. அதாவது, விஜய் தமிழக அரசிலில் அமைச்சராக வரவேண்டும் என்பது வாழ்நாள் கனவு என, அந்த ரசிகர் ஒரு கோவிலில் முட்டி இட்டு வேண்டுதல் செலுத்தியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


தற்பொழுது இந்த ரசிகர் செய்த செயலால், ரசிகர்களின் நம்பிக்கை எல்லை மீறி வருகின்றது என்பது தெரியவந்துள்ளது. விஜய் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ரசிகர் வேளாங்கண்ணி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோவிலில் முட்டி போட்டு வேண்டியுள்ளார். 

இந்த சம்பவம், தமிழ்த் திரையுலகத்திலும் அரசியலிலும் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. மேலும் விஜய் தனது அரசியல் பயணத்தில் எவ்வாறு நகர்கின்றார் என்பதற்கு இவை எல்லாம் முக்கியமான அடையாளங்களாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement