• Jul 18 2025

அரசியலைத் தவிர்க்க சொல்லாதீங்க.! பயமா இருக்கு.. –மாரி செல்வராஜின் பளீச்சென்ற வார்த்தைகள்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய சமூக அரசியல் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மாரி  செல்வராஜ், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தையும், அரசியல் வெளிப்பாடுகளையும் விமர்சித்து, மிக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.


அவர் பேசிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வருகின்றது. குறிப்பாக, “அரசியலைத் தவிர்த்து பேசச் சொல்வது ஒரு பயங்கரமான விஷயம்” என்ற அவரது வார்த்தைகள், அரசியல் மற்றும் சினிமா இடையிலான உறவை மீண்டும் ஒரு முறை கலந்துரையாட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நேர்காணலில் மாரி செல்வராஜ், “அரசியலை ஒதுக்கிட்டு சினிமா பேசுங்க என்று சொல்வதைப் பார்த்தால் பயமா இருக்கு. ஏனென்றால் சினிமாவை முடித்ததும் எல்லாரும் அரசியலுக்கு தான் போகப் போகிறார்கள் என்று எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனா நம்ம கிட்ட பேசும்போது தலைவா அரசியல் மட்டும் வேண்டாம் தலைவா என்று சொல்லுவாங்க. நமக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அப்படி பேசின ஆட்கள் எல்லாமே இன்னைக்கு அரசியலுக்கு தான் போறாங்க. அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை நமக்கே தெரியும்.” என்றார்.


இந்த வரிகள், அவர் பேசும் பொழுதே மிக ஆழமான அரசியல் சமூக சிந்தனையை கொண்டு வருகின்றது. அவரது படைப்புகள் போலவே அவரது பேச்சும் எளிய வார்த்தைகளில், தீவிரமான உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மாரி செல்வராஜின் இந்த கருத்துகளுக்கு சமூக வலைத்தளங்களில் தெறிக்கவைக்கும் அளவில் ஆதரவு கிடைத்து வருகின்றது. பலர் "அவர் சொல்வது உண்மைதான். சினிமா ஒரு கலை மட்டுமல்ல, அது மக்கள் உணர்வுகளுக்கு பிரதிநிதி", என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement