• Apr 27 2025

புஷ்பா 3 பற்றி படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்..! சந்தோசத்தில் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த "புஷ்பா" திரைப்படம் 2021ல் வெளியாகியிருந்தது. இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது. திரையரங்குகளில் மட்டுமல்லாது ஓடிடியிலும் இப்படத்தினை அதிகளவான ரசிகர்கள் பார்த்திருந்தனர்.

அல்லு அர்ஜுன் "புஷ்பா" கதாபாத்திரத்தில் பெற்ற வரவேற்பு தென்னிந்திய திரையுலகில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன் தெலுங்கில் மாபெரும் சாதனையையும் ஏற்படுத்தியிருந்தது.


இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 கடந்த ஆண்டு 2024 நவம்பர் மாதம் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அத்துடன் இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர்கள் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மாஸாக உருவாக்கி இருந்தார்கள். இது ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது புஷ்பா 3 உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் 2028ம் ஆண்டு புஷ்பா படத்தினை வெளியிடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. இரண்டாம் பாகத்தில் புஷ்பா மற்றும் போலீஸ் அதிகாரி பான்வர் சிங் இடையேயான மோதல் ரசிகர்களை பரபரப்பாக்கியது. இதைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்தின் கதை இன்னும் மாஸாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement