தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யாவை வைத்து "ரெட்ரோ" திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இத் திரைப்படம் மே முதலாம் திகதி வெளியாகி வசூல் ரீதியில் சாதனை படைத்து வருகின்ற நிலையில் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் சமூகவலைத்தளப்பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது .
"ரெட்ரோ" திரைப்படம் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது. இத் திரைப்படம் இன்று வரை100 கோடி வரை வசூல் செய்துள்ளது. சினிமா துறையில் ஒரு படம் ஹிட்டானாலே அந்த படத்தில் நடித்த ஜோடி அல்லது இயக்குனர்,நாயகன் என இருவரும் இணைவதையே ரசிகர்கள் விரும்புவார்கள. அதற்கமைய ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .
அதாவது தாங்கள் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். மேலும் அவர் சூர்யா சாருக்காக தயாராக இருக்கும் கதை தனது கனவு படம் அதற்கு மிகப் பெரிய பட்ஜெட் தேவை எனவும் கூறியுள்ளார்.
Listen News!