• May 16 2025

பிக்பாஸ் பியூட்டியின் புதிய லுக்..! இன்ஸ்டாவில் கமெண்ட்ஸ் மழையைப் பொழியும் ரசிகர்கள்...!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான முகமான நடிகை சாக்ஷி அகர்வால் தனது அழகு, கம்பீரமான தோற்றம் மற்றும் பெர்சனாலிட்டியால் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு  ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியிருந்தார்.


தற்போது, இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பலரும் "பிக் பாஸ் பியூட்டி" என்று இந்த நடிகையின் லேட்டஸ்ட் லுக்கிற்கு கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.


சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் காலா, ராஜா ராணி, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் மாடலிங் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், மெதுவாக சினிமா துறையிலும் கால்பதித்தார்.


பிறகு 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மேலும் பரிச்சயமான முகமாக மாறினார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஸ்டைலிஷ் போட்டோஷூட்கள், இன்ஸ்டா ரீல்கள் எனத் தன்னை நிரூபித்து வருகின்றார். அந்தவகையில் தற்பொழுது வெளியான புகைப்படங்கள் அவரது அடுத்த பட வாய்ப்பிற்கான அடித்தளமாக இருக்கலாம் எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.




Advertisement

Advertisement