தனுஷின் கம்பேக் மாஸ் லுக் மற்றும் வைரலான போஸ்டர்களால் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் தான் ‘குபேரா’. இந்தப் படத்தின் முதல் பாடலான ‘போய்வா நண்பா’ இன்று வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகிய இந்தப் பாடல், ரசிகர்களிடையே சில நிமிடங்களிலேயே வைரலாகி வருகின்றது.
இப்பாடலின் ஹைலைட் என்னவென்றால் இதனை இசையமைத்தது யுவன் ஷங்கர் ராஜாவாக இருந்தாலும் இப்பாடலை பாடியிருப்பது தனுஷ் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'போய்வா நண்பா’ என்ற வரிகளோடு தொடங்கும் இந்தப் பாடல் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.
இந்தப் பாடலின் லிரிக்ஸ் மிக நுட்பமானதாக அமைந்திருக்கின்றது. இந்தப் பாடல் படத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இடம்பெறலாம் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் இப்பாடல் வெளியானதைத் தொடர்ந்து அனைத்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இப்பாடலுக்கு vibe செய்து வருகின்றார்கள். இதன் மூலம் படம் திரையரங்கை தெறிக்கவிடப் போகின்றது என்பதனை அறியமுடிகிறது.
Listen News!