• Apr 27 2025

வெள்ளித்திரையில் ஓவர் கவர்ச்சியில் ரச்சிதா..! பேன்ட் இல்லாமல் வெளியான 'ஃபயர்' கிலிம்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் கவினுக்கு ஜோடியாக நடித்த சீரியல் தற்போது வரையில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தனது காதல் கணவரை பிரிந்திருந்த நிலையில் ரோபட் மாஸ்டர் அவருக்கு பின்னாடியே காதல் வலை வீசி வந்தார். ஆனாலும் அதில் அவர் சிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து வெளியே வந்த ரச்சிதா கணவர் தினேஷ், பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தனது மனைவியான ரச்சிதாவை பிரிந்து இருந்தாலும் இது ரச்சிதாவிற்காக என்று தான் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.


அண்மையில் ரச்சிதா அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சி யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்குமே தவிர பட வாய்ப்புகளை கற்று  தராது என்பதை கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது இன்றைய தினம் ரச்சிதா மகாலட்சுமி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சப்ரைஸ் ஆக அவர் நடித்த ஃபயர் படத்தின்  வீடியோவை வெளியிட்டுள்ளனர்.


குறித்த திரைப்படம் ஜே.எஸ்.கே இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளதோடு அந்த படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா,  சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி, பேட்மேன் உள்ளிட்ட பலரோடு ரட்சிதா மகாலட்சுமியும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் குடும்ப குத்து விளக்காக காணப்பட்ட இவர், வெள்ளித்திரைக்கு வந்ததும் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளமை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Advertisement

Advertisement