இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வசூல் நிலவரம் திரைப்படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்துள்ள கருத்துக்களுடன் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். இதில் அவர் குட் பேட் அக்லி திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் "இப்படம் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இந்த படம் நஷ்டம் என்று கூறி வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள தயாரிப்பு நிறுவனம் கூற வேண்டிய அவசியம் உள்ளது. அந்த விவரங்கள் எங்களிடம் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!