தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான நடிகர் சூர்யா மற்றும் தனித்துவமான படங்களை உருவாக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ‘ரெட்ரோ’. இப்படம் கடந்த வாரம் தியட்டரில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியடைந்த நிலையில், ‘ரெட்ரோ’ படம் அவரின் ரீ-என்ட்ரி படமாகவே காணப்பட்டது. ‘ரெட்ரோ’ படம் 1980களின் பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படமாகும். சூர்யா இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
படத்தின் கலை இயக்கம் மற்றும் பிரம்மாண்டமான ஒளிப்பதிவு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. படம் வெளியாகிய பிறகு, சமூக வலைத்தளங்களில் இருந்து விமர்சனங்கள் கலவையாக வந்தன.
அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவலின்படி, ரெட்ரோ படம் உலகளவில் 13 நாட்கள் முடிவடைவதற்குள் ரூ. 98 கோடி வசூலை எட்டியுள்ளது. இது சூர்யாவிற்கு பாக்ஸ் ஆபிஸ் ரீதியில் நல்ல வரவேற்பினைப் பெற்றதை எடுத்துக்காட்டுகின்றது.
Listen News!