• May 13 2025

விஜய் அஜித்திற்கு நோ சொன்ன பிரபல நடிகை..! வெளியான அதிர்ச்சித் தகவல் இதோ...!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனது திறமையான நடிப்பால் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. மலையாள படமான "பிரேமம்" மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மலர் டீச்சர், இன்று தென்னிந்திய திரையுலகின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார். தனது இயல்பான தோற்றம், நடிப்புத்திறமை, நடனம் இவை அனைத்தும் சாய் பல்லவியின் வளர்ச்சிக்கான அடித்தளங்களாக அமைந்துள்ளன.


இப்போது வெளியான தகவலின்படி, நடிகை சாய் பல்லவி விஜய், அஜித் நடிப்பில் வெளியாகிய மிகப் பெரிய ஹிட் படங்களை நிராகரித்துள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'வலிமை', 'வாரிசு' ஆகிய படங்களை நிராகரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக சாய் பல்லவியிடம் பேசியபோது, "கதையின் நுணுக்கங்களும், அதன் தாக்கமும் எனக்கு சரியாக அமையவில்லை. நான் செய்கிற ஒவ்வொரு வேடத்தையும் முழு மனதுடன் ஏற்க வேண்டும் என்பதற்காகவே, அந்த வாய்ப்பை நிராகரித்தேன்.," என அவர் கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சாய் பல்லவி திரைத்துறையில் எப்போதுமே மிக எச்சரிக்கையாக கதைகளைத் தேர்ந்தெடுப்பவர். தனது தோற்றத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல், மேக் அப் இல்லாமல் இயல்பாகவே வலம் வரும் நடிகையாக, தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி பாதையை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement