தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு “பராசக்தி” தற்பொழுது உருவாகி வருகின்றது. ஆனால் இது 1952ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தின் ரீமேக் அல்ல. இது ஒரு அடிப்படை மனித உரிமைகள், சமுதாய நீதிக்கான குரல் எனப் புதிய பாணியில் உருவாகும் அரசியல் சுதந்திரம் சார்ந்த திரைப்படமாக உருவாகி வருகின்றது.
இந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, பின்னர் விலகியவர் நடிகர் சூர்யா என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் சூர்யா அப்படத்தில் நடிக்காது இருந்தமைக்கு, அப்படத்தின் கதை ஹிந்தி எதிர்ப்பிற்கு எதிரானதாக அமைந்திருப்பதே காரணமாகும். இந்நிலையில், அவருக்குப் பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தைரியமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்படத்தின் ஆரம்ப கட்ட திரைக்கதை, நடிகர் சூர்யாவிடம் சென்றபோது, அவர் முதலில் பெரும் ஆர்வத்துடன் கதை கேட்டு, அதில் நடிக்க மன உறுதியோடு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பின்னர், திரைக்கதையில் ஹிந்தியை எதிர்ப்பதாக இருப்பதனை கவனித்த பிறகு அதிலிருந்து விலகியுள்ளார் சூர்யா.
Listen News!