• May 18 2025

சக்திவேலாக சிவகார்த்திகேயனை விரும்புகிறேன்.! சூரியவம்சம் 2 குறித்து ராஜகுமாரன் பேட்டி..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பும் நெகிழ்ச்சியும் கலந்து உருவான படங்களில் முதன்மையானதாக “சூரியவம்சம்” போற்றப்படுகின்றது. 1997-ல் வெளிவந்த இத்திரைப்படத்தினை ரத்னமா பிலிம்ஸ் தயாரித்ததோடு  சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் “சூரியவம்சம் 2” குறித்த தனது திட்டங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், மிக முக்கியமானதொரு கருத்தையும் கூறியுள்ளார். அதாவது, "அந்த படத்தில் சக்திவேல் கதாப்பாத்திரத்தில் தற்பொழுது சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயனைப் பார்க்க ஆசைப்படுகிறேன்." என்று கூறியுள்ளார்.


இயக்குநர் ராஜகுமாரன், பல தமிழ்ப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இயக்குநர் தற்பொழுது சூரியவம்சம் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்தகைய சிறப்பான கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது என்றால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியவம்சம் என்ற பெயர் இன்று வரை ரசிகர்களிடையே “பாசக்கதை” என்பதற்கான ஒரு உயர்ந்த அடையாளமாகவே காணப்படுகின்றது. இப்போது அதே உணர்வுகளை இன்றைய தலைமுறைக்கு ஏற்ப மாற்றி, சிவகார்த்திகேயனின் நடிப்பிலும் மீண்டும் திரைக்கதையாகக் கொண்டுவருவோம் என்கிற இயக்குநரின் கனவு தமிழ்சினிமாவில் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement