• Apr 26 2025

அஜித் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு தான் வரவேற்பா..?நம்ப முடியாமல் இருக்கே..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹீரோ நடிகர் அஜித். இவர் நடித்த படமென்றாலே முதல் ஷோவிலேயே ரசிகர்கள் திரையரங்குகளை அதிரவைப்பது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் வெளியான அவரது திரைப்படமான 'குட் பேட் அக்லி' உலகளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்து வருகின்றது.

இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் வெவ்வேறு கதைக்களத்துடன் அஜித் நடித்துள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 


'குட் பேட் அக்லி' படம் வெளியாகி 8 நாட்களாகியும், அந்த ஓட்டம் இன்னும் குறையாமல் உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இதுவரை வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபிஸ் தகவலின் படி, உலகளவில் 208 கோடி வசூல் பெற்றதுடன் வெளிநாடுகளில் மட்டும் 60 கோடியைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படமாக 'குட் பேட் அக்லி' தற்போது மாறியுள்ளது. இது வெளிநாடுகளில் தமிழ் படத்திற்கு கிடைத்த சாதனையாகவே கருதப்படுகின்றது. இத்தகவல் வெளியானதிலிருந்து அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement