தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் KJR தற்போது கதாநாயகனாகவும் அறிமுகமாகின்றார். இவர் அறம், டாக்டர், அயலான் எனப் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் இடத்தில் பெரும் அதிர்ச்சியையும் மகிழ்வினையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கும் KJR இவர் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு "அங்கீகாரம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும். இந்த திரைப்படத்தினை பா. ரஞ்சித்தின் துணை இயக்குநராக பணிபுரிந்த JP. தென்பாதியான் இயக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோவாக அறிமுகமாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அவர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!