• Apr 26 2025

KPY பாலா ஒரு நல்ல மனிதர்....புகழ்ந்து தள்ளிய தங்கதுரை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் காமெடியன் தங்கதுரை, சமீபத்திய பேட்டியில் தனது நண்பர் KPY பாலா பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தங்கதுரை பாலாவை பார்க்கவே மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என்றும், பாலா சமூகத்திற்காக நிறைய நல்ல செயல்கள் செய்துவருகின்றார் என்றும் அதில் கூறியுள்ளார்.


காமெடி உலகில் மட்டுமல்லாது சமூகப் பணியிலும் KPY பாலா முன்னணி வகிக்கிறார். பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாலாவை பிறருக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று தங்கதுரை குறிப்பிட்டார்.

மேலும் தங்கதுரை "நான் பாலாவைப் பார்க்கும் போது, எனக்கும் நிறைய உதவிகள் செய்யணும் என்று தோணுது என்றார். அத்துடன் அவர் செய்த சமூக சேவைகளை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது" என உருக்கமாக தெரிவித்தார். பாலாவின்  சமூக சேவைகள் குறித்து பேசியதுடன் இதற்கு அவரது  ரசிகர்களும் வெறித்தனமான ஆதரவை வழங்கி வருகின்றனர் என்றார்.


KPY பாலா நடிகராக மட்டுமல்ல, சமூக சேவையிலும் முக்கியமான ஒரு நபராக மாறியுள்ளார். அவரது நல்ல செயல்கள், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக  மாறியுள்ளன. இத்தகைய பாலாவின் சமூகப் பணிகளை  அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement