• Jul 18 2025

உதவிக்கு மேல் உதவி செய்யும் KPY பாலா..! வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். சிறு வேடத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கி உள்ளார்கள். 


தற்போது திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில்  நடித்து வந்த இவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது . இந்த நிலையில் பாலா தந்தையர் தினத்தன்று செய்த உதவி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


மேலும் பாலா "வயதான காலத்தில் சைக்கிள்களுக்கு கைப் பம்ப் மூலம் காற்றை நிரப்பும் தொழில் செய்து வந்த ஒரு தந்தைக்கு தந்தையர் தினத்தில் "எலக்ரிக் பம்ப் மெஷின்" ஒன்றை வாங்கி உதவி செய்துள்ளார். என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.








Advertisement

Advertisement